Homeசெய்திகள்தமிழ்நாடுகட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னை சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா?- அண்ணாமலை

கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னை சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா?- அண்ணாமலை

-

கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னை சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா?- அண்ணாமலை

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாரத மாதா

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ