- Advertisement -
கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாக பேசிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனை மாற்றக்கோரி பாஜகவினரே போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் அவதூறாக பேசினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக திமுகவினர் அளித்த புகாரின்பேரில் கலிவரதனை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர். கலிவரதனுக்கு எதிராக ஏற்கனவே பாலியல் புகார் உள்ளது குறிப்பிடதக்கது.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட பாஜகவினர் பல்வேறு புகார்களை கூறி கலிவரதனை மாற்ற வேண்டும் என போராட்டங்கள் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.