- Advertisement -
வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளாா்.பாஜக அரசால் வங்கிகள் வசூல் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, வங்கி சேவைகளுக்கான கட்டணங்கள் பற்றிய தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ₹23 கட்டணம் விதிக்கப்படுவதை அவர் கண்டித்தார். மேலும், பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு ₹100 முதல் ₹3200 வரை அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறினார். இதுபோன்ற கட்டாயப் செலவுகளை வங்கிகள் திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? – ராமதாஸ் விமர்சனம்