Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழர் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு தி.மு.க.வே காரணம்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

“தமிழர் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு தி.மு.க.வே காரணம்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

-

 

"தமிழர் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு தி.மு.க.வே காரணம்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
File Photo

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் இன்று (ஜூன் 11) காலை 11.30 மணிக்கு நடைபெற்ற தென்சென்னை மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம். தென்சென்னை மக்களவைத் தொகுதியில் எஞ்சியிருக்கும் 40% பூத் கமிட்டியை வேகமாக முடிக்க வேண்டும்.

தமிழகம் இருளில் உள்ளதை மின்தடைக் காட்டுகிறது. தமிழகத்திற்கு பா.ஜ.க. வெளிச்சத்தைக் கொண்டு வரும். நான் சென்னை விமான நிலையம் வந்தவுடன் மின்சாரம் போனது, எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!

இரண்டு முறை பிரதமர் வேட்பாளரை தமிழகம் இழந்ததற்கு காரணம் தி.மு.க. தான். மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் கொண்டுச் சேர்க்க வேண்டும். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். பா.ஜ.க.வின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தில், 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், பூத் கமிட்டி உள்ளிட்டவைக் குறித்து கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார் தினேஷ் கார்த்திக்!

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

MUST READ