Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!

சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!

-

- Advertisement -

 

சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!
File Photo

பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாளை (அக்.03) சென்னைக்கு வருகிறார்.

ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடி

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், டெல்லி சென்றுள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழக அரசியல் சூழல், அ.தி.மு.க. ஏன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது? என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாளை (அக்.02) சென்னைக்கு வருகிறார். சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பி.எல்.சந்தோஷ், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பான கருத்துக் கேட்கவுள்ளார்.

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது!

பின்னர், கட்சியின் தேசிய தலைமைக்கு பி.எல்.சந்தோஷ் அறிக்கையாக சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ