பா.ஜ.க. இளைஞரணி தலைவர் தற்கொலை முயற்சி
ராமநாதபுரம் பா.ஜ.க. இளைஞர் அணி நிர்வாகி பதவிக்காக செவ்வூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் பிரபா கார்த்திகேயன் பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ வெளியாகிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சொந்த கட்சியினரே பேரம் பேசும் ஆடியோவை பரப்பியதால் மனம் உடைந்த பிரபா கார்த்திகேயன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ராமநாதபுரம் பாஜக இளைஞர் அணி நிர்வாகி பதவிக்காக செவ்வூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் பிரபா கார்த்திகேயன் பணம் கேட்டதாக புகார் எழுந்தது. இதை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாக பொறுப்புகளை பெற அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் பெருமளவில் பணம் கேட்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மனமுடைந்த பிரபா கார்த்திகேயன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சொந்த கட்சியினரே இதற்கு காரணம் என்று பிரபா கார்த்திகேயன் கடிதம் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக நிர்வாக பதவிகளுக்கு பணம் கேட்பதாக புகார் எழுந்ததை எடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதைய அனைத்து நிர்வாகப் பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாஜகவில் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருவதால் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.