Homeசெய்திகள்தமிழ்நாடுபிஜேபிக்கு கைவந்த கலை - செல்வப் பெருந்தகை விமர்சனம்

பிஜேபிக்கு கைவந்த கலை – செல்வப் பெருந்தகை விமர்சனம்

-

- Advertisement -

தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று –  வட மாநிலங்கள் போல் தற்போது தமிழகத்திலும் அதனை தொடங்கியுள்ளனர் – தனி நபர்களை தாக்கி பேசுவது மட்டும் அல்ல. ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள் – தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி.

 

பிஜேபிக்கு கைவந்த கலை - செல்வப் பெருந்தகை விமர்சனம்கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை காலபைரவரை தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்

தனி நபர்களை தாக்கி பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்கள் தாக்கி பேசுவது அதிகளவில் நடைபெறும், தமிழகத்தில் தற்போது தான் அதனை தொடங்கி உள்ளனர். தனிநபர்கள் தாக்கி பேசுவது மட்டும் அல்லாமல், ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை முருகன் ஆகியோர் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கருணாநிதி, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். காமராஜரை தொடர்ந்து கருணாநிதி தான் பொன் எழுத்துக்களால் எழுத கூடிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் என்றார். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசும் போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்.

 

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை ஒப்பீடும் போது, திமுக அரசின் 3 ஆண்டுகளில் குறைவாக தான் நடந்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத்துறையில் ஆய்வாளருக்கு பதிலாக, துணை காவல் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஐஜி அந்துஸ்து உள்ள அலுவலர்களை நியமித்து, வலிமைப்படுத்த வேண்டும் என்றார்.

 

பிஜேபிக்கு கைவந்த கலை - செல்வப் பெருந்தகை விமர்சனம்தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்று தர கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது என தெரிவித்த செல்வபெருந்தகை, அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து என் மீது தனிநபர் தாக்குதல் செய்ய வேண்டும், காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும் என தெரிவித்தார்.

MUST READ