Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் தடையை மீறி கருப்பு தின பேரணி... அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது

கோவையில் தடையை மீறி கருப்பு தின பேரணி… அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது

-

கோவை காந்திபுரத்தில் தடையை மீறி கருப்பு தின பேரணி செல்ல முயன்ற பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலிசார் கைது செய்தனர்.

கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கைதுசெய்யப்பட்ட அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷ கடந்த 16-ந்தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரது உடல் கோவை உக்கடம் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை கண்டித்து கோவையில் தடையை மீறி பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் கருப்பு தின பேரணியில் ஈடுபட்டனர். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பேரணிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, போலிசார்  அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்து வாகனத்தில் அழைத்துச்சென்றனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ