முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் புதிய வண்ணத்திலும், நவீன வசதிகளுடனும் இனி வலம் வரவுள்ளன.
கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மாநில காவல்துறை சார்பில், துணை ஆணையர் திருநாவுக்கரசு தலைமையிலான குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர, பாதுகாப்புப் பிரிவு ஆயுதப்படை, வெடிகுண்டு பிரிவைச் சேர்ந்தவர்கள், தேவைக்கேற்ப முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் துப்பாக்கி ஏந்திய பெண் கமாண்டோக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே, முதலமைச்சருக்கான பாதுகாப்பு வாகனங்கள், இதுவரை வெள்ளை நிறத்தில் இருந்த நிலையில், தற்போது கறுப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதால், தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களுக்கும் அத்தகைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?
இதற்காக ஆறு இன்னோவா கிறிஸ்டோ ரக கார்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் முழுமையான கறுப்பு நிறத்தில் உள்ளன.