பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்- 4 பேர் மீது வழக்குப்பதிவு
கொடைக்கானலில் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவை மிரட்டிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் 13 சென்ட் நிலம் நடிகரான பாபி சிம்ஹாவிற்கு இருந்து வருகிறது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகளை கொடைக்கானலை சேர்ந்த நபர் செய்து வருகிறார். இதற்காக ஒப்பந்தக்காரருக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கும் பாபி சிம்ஹாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .
தான் கட்டி வரும் வீட்டின் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்திய சிம்ஹா மற்றும் அவரது மேலாளர் ஆகியோரை ஒப்பந்ததாரர் அசிங்கமாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் . மேலும் 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே வீட்டில் விலையை முடித்து தருவோம் எனவும் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து சம்மந்த பட்ட நபர்கள் மீது கொலை மிரட்டல் மற்றும் ஏமாற்றுதல் அசிங்கமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .