Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6 முதல்

மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6 முதல்

-

மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6 முதல்மதுரை மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த 2006 முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில்

நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின் படி புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக கொண்டு செல்லும் நோக்கில் கடந்த ஆண்டு முதல் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டிற்கான புத்தக கண்காட்சி வரும் செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது.

தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பேச்சு போட்டிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ மாணவியரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்டைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா கேட்டுக்கொண்டு உள்ளார்.

புத்தக கண்காட்சியில்  குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும் அமைக்கப்பட உள்ளது.

MUST READ