Homeசெய்திகள்தமிழ்நாடுபூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்

பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்

-

- Advertisement -

பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்

எடப்பாடி கொங்கணாபுரம் அருகே தனியார் உணவகத்தில் வாங்கிய பரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை அறியாமல் சாப்பிட்ட இருவர் மயக்கமடைந்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவா் மயக்கம்- Dinamani

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எட்டிக்குட்டைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் முருகவிலாஸ் பெயர் கொண்ட தனியார் உணவகத்தில், கச்சுப்பள்ளி கிராமம் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன், கலையரசன் ஆகிய இருவரும் 7 பரோட்டா குருமாவுடன் பார்சல் கட்டிக்கொண்டு அவர்களது வீட்டில் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பரோட்டா குருமாவில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பரோட்டா சாப்பிட்டு சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Parotta Salna Recipe | Empty Salna Recipe

உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொங்கணாபுரம் போலீசார் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் தனியார் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ