அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 31,000 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவுத் திட்டமும் சில பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 31,008 அரசுப் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இதனால் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் சமூக நலத்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்!
காலை உணவுத் திட்ட செலவினங்களுக்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு உப்புமா, கிச்சடி, சிறுதானிய உணவுகள், வெண்பொங்கல், கோதுமை ரவை உப்புமா வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.