Homeசெய்திகள்தமிழ்நாடு'காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து நடத்தும்' என அறிவிப்பு!

‘காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து நடத்தும்’ என அறிவிப்பு!

-

- Advertisement -

 

'காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து நடத்தும்' என அறிவிப்பு!
Video Crop Image

பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து நடத்தும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!

பெருநகர சென்னை மாநகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 37 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த திட்டம், 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

நிர்மாணிக்கப்பட்ட 35 சமையற்கூடங்களில் இருந்தும், தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின் படி உயர் அலுவலகங்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில், காலை உணவைத் தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா!

எனினும், காலை உணவுத் திட்டத்தைத் தனியாருக்கு கொடுக்கும் ஒப்பந்த அறிவிப்பு தற்போது வரை கோரப்படவில்லை. இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி சார்பிலேயே காலை உணவுத் திட்டத்தைத் தொடர்ந்துச் செயல்படுத்தும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

MUST READ