சென்னை வேளச்சேரியில் உள்ள பிரியாணிக் கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கெட்டுப்போன சிக்கன் இருந்ததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
வேளச்சேரியில் உள்ள ஒரு பிரியாணிக் கடையில் நாள்தோறும் அதிகாலை 04.00 மணி முதல் பிரியாணி விற்பனைச் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று (அக்.12) அதிகாலை அந்த பிரியாணிக் கடைக்கு சென்ற நான்கு பேர் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். அப்போது, அதில் இருந்த சிக்கன் கெட்டுப் போகியிருப்பதை அறிந்த அவர்கள், கடையின் உரிமையாளரை அழைத்து, இது குறித்து கேட்டனர்.
நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!
ஆனால் அதற்கு முறையாக பதிலளிக்காமல், கடையில் இருந்த சிக்கனை அவசரமாக குப்பையில் கொட்டியதாகத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.