- Advertisement -
விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ்
ஐபிஎஸ் படித்துவிட்டு முதல் பணியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏடிஎஸ்பி ஆக பொறுப்பேற்ற பல்வீர்சிங், விசாரணைக்காக அழைத்து வரும் அனைத்து குற்றவாளிகளின் பற்களையும் பிடுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய உட்கோட்டத்தில் உட்பட்டட ஐந்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு குற்ற செயல்கள் மற்றும் விசாரணை கைதிகளாக அழைத்து வரப்படும் குற்றவாளிகளை விசாரணையின்றி அவர்களின் பல்லை பிடுங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் அம்பாசமுத்திரம் ஏடிஎஸ்பி பல்வீர் சிங்.
கணவன், மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, அடிதடி பிரச்சனை, அண்ணன், தம்பி பிரச்சனை, பக்கத்து வீட்டு பிரச்சினை என எந்த பிரச்சினைக்கு காவல் நிலையம் சென்றாலும் அவர்களின் பற்களை பிடுங்குவதை முதன்மைபணியாக செய்து வருகிறார் ஏடிஎஸ்பி பல்வீர் சிங். இதுதொடர்பாக பல்லை பறிகொடுத்த நபர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் சேரன்மகாதேவி உதவி ஆட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.