திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.
சுடு காட்டிற்கு மாற்று இடம் வழங்கப்பட்ட ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த பிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திருசெந்தூர், சுப்ரமணியபுரம் கிராமத்தில் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறப்பவர்களை இப்பகுதியில் அமைந்துள்ள ஐயா வைகுண்ட சுவாமி கோவிலின் மேற்கு புறத்தில் அமைந்துள்ள இடுகாட்டில் புதைப்பது வழக்கம்.
இந்நிலையில் கோவில் பக்தர் ஒருவர் 300 கோடி ரூபாயை, கோவிலின் விரிவாக்க பணிக்காக வழங்கியுள்ளார். இதனால் அறநிலைய துறை அதிகாரிகள் இடுகாட்டை இடித்து அப்புறப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
கோவிலில் இருந்து 500 அடி தொலைவில் இந்த இடுகாடு அமைந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள இடுகாட்டை இடிக்க தடை விதிப்பதோடு, மாற்று இடம் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்பகுதி மக்கள் கோரிக்கை ஏற்று சுடுகாட்டிற்கான மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள்.
சுடுகாடு இடம் வழங்கப்பட்டுள்ளது என வாய்மொழியாக தெரிவித்தால் எப்படி இடம் வழங்கியதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர் .
மேலும் சாமி கும்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதேவிட இறந்த பின் மனிதனே அடக்கம் செய்வது முக்கியம். எனவே அரசு தரப்பில். இடம் வழங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்கள்.