அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 40- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட ஐந்து பேர், காரில் பழனி அருகே உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் மத்தியில் இருந்த தடுப்பைத் தாண்டி எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதியது.
இதில், காரில் பயணித்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்த மக்கள் விரைந்துச் சென்று பெருந்துப் பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் – 7
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.