பேருந்து மீது லாரி மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நெல்லை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
சென்னை வடபழனியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்தது. காவாலி என்ற இடத்தில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது மற்றோரு லாரி மோதியது. மேலும், விபத்தை தவிர்ப்பதற்காக, லாரி ஓட்டுநர் வலதுபுறமாக லாரியைத் திருப்ப, எதிர்திசையில் வந்த பேருந்து சென்னை பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். தகவலறிந்து வந்த நெல்லூர் காவல்துறையினர், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியதுடன், விபத்துக்குள்ளான லாரிகளையும் பேருந்தையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை!
இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சென்னையில் இருந்து சென்ற பேருந்து என்பதால், விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.