கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்கு அருகே ஷூ நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த லக்னோ அணி!
முருகந்தால் கிராமத்தைச் சேர்ந்த தனியார் ஷூ நிறுவனத்தின் பணியாளர்களே பணியை முடிந்த பின்பு நிறுவனத்தில் இருந்து அழைத்து வரும் பேருந்து இறுதியில் அந்தகிராமத்திலேயே நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், அப்பேருந்தில் இருந்த மூன்று பேர் டீசல் திருட முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய நிலையில் ஒருவரின் செல்போன் தவறி கீழே விழுந்தது.
கிராம மக்கள் செல்போனை கைப்பற்றி கல்லாவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் செல்போனை கொண்டு துப்புத்துலக்கி டீசல் திருட முயன்றதாக பெரிய கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன், ஜீவா, குபேந்திரன் ஆகியோரை கைது செய்து 150 லிட்டர் டீசலைப் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!
இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.