சென்னையில் பேருந்தின் பின் இருக்கை அருகே பலகை உடைந்த விபத்தில் சம்மந்தப்பட்ட பணிமனை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான ஒவ்வாமை பிரச்சினைக்கு மருந்தாகும் மூலிகை தேநீர்!
வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கிச் செல்லும் தடம் எண் 59 பேருந்து, அமைந்தகரை அருகே சென்ற போது, பின் இருக்கை அருகில் பொருத்தப்பட்டிருந்த பலகை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் அந்த இடத்தில் அமர்ந்திருந்த பெண் பயணி கீழே விழுந்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெண் காயத்துடன் உயிர் தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் பயணி கூறுகையில், “இருக்கையில் இருந்து தான் கீழே விழுந்ததாக நினைத்தனர். பேருந்துக்கு அடியில் சிக்கியதை, அருகில் இருந்தவர்களிடம் கூறினேன். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டதை அடுத்து வெளியேறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தலை முடி உதிர்தலை கட்டுப்படுத்தி வளர்ச்சி அதிகரிக்க பாட்டி சொன்ன டிப்ஸ்!
இந்த சம்பவம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட பணிமனை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.