சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஜன.30) முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்- 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும் இன்று (ஜன.30) முதல் சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அதிகப்படியான பேருந்துகளும், அதன் பிறகு பயணிகளின் அடர்விற்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.
பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!
திருச்சி, சேலம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர் வழியாக புதுச்சேரி, திண்டிவனம், புதுச்சேரி வழியாக திண்டிவனம், திருவண்ணாமலை வழியாக செஞ்சி, போளூர், வந்தவாசி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மொத்தம் 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.