Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பதி - தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது

திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது

-

திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்கப்பட்டுவருகின்றன.

தமிழகம் - ஆந்திரா பேருந்து சேவை பாதிப்பு.. திருப்பதியில் தவிக்கும் பக்தர்கள்..

ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு செயல்பட்டபோது கிராமப்புறங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ 371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றப் புலனாய் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். வழக்கின் அடிப்படையில் இன்று காலை 6 மணியளவில் ஆந்திரா மாநிலம் நந்தியலாவில் அவரை குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு கைது செய்ததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் ஈடுபட்டு வந்ததால். பாதுகாப்பு கருதி தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் தமிழக எல்லையில் காலை 6 மணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது. சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்பதி, சித்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

MUST READ