![பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 கால்கள் முறிந்தன!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/11/108-ambulance-1.jpg)
சென்னையை அடுத்த குன்றத்தூர் அரசுப் பேருந்தில் தொங்கியபடி, சென்ற பள்ளி மாணவன் கீழே விழுந்ததில் இரண்டு கால்களும் முறிந்தனர்.
எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்!
குன்றத்தூர் கொல்லச்சேரி நான்கு வழிச்சாலை சந்திப்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் குன்றத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், அரசுப் பேருந்துகளில் செல்கின்றனர்.
அதிகளவு கூட்டம் இருந்ததால், பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்கின்றனர். அந்த வகையில், பேருந்தில் தொங்கியபடி, சென்ற ஒரு மாணவன் தவறி கீழே விழுந்ததில், அவரது இரண்டு கால்களும் முறிந்தன.
முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
காலில் பேருந்தின் டயர் ஏறி இறங்கியதில் கால் எலும்புகள் துண்டாகின. ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.