Homeசெய்திகள்தமிழ்நாடுதொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!

தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!

-

 

தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!

தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை போனது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் மேற்குவங்கம் மாநிலத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரஜேஷ்குமார் குகாத்தியா தனது குடும்பத்துடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் சென்னையில் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் ரூபாய் 7 லட்சம் பணம் மற்றும் தங்கம், வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த தொழிலதிபர், கதவுகள், பீரோக்கள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சம்மந்த வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டனர்.

ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

அதைத் தொடர்ந்து, தொழிலதிபர் வீட்டில் பணிபுரியும் காவலாளி, சமையல்காரர் ஆகியரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நீலாங்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், தொழிலதிபர் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வுச் செய்து வருகின்றனர்.

MUST READ