சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்காக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 35.79 கோடி சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு அமலாக்கத்துறை வசம் சென்றது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து விவரங்களை தங்களுக்கு வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநரிடம் அனுமதி பெறாமல் தன் மீது வழக்குப்பதிவு எனக்கூறி சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கும் இன்று (ஏப்ரல் 25) விசாரணைக்கு வரவுள்ளது.
ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!
இந்த சூழலில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது மனைவி ரம்யாவுடன் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகியுள்ளார்.