Homeசெய்திகள்தமிழ்நாடுசிறுவாபுரியில் செவ்வாய்கிழமை விஐபி தரிசனத்தை ரத்து செய்யுங்கள்: பக்தர்கள் ஆதங்கம்

சிறுவாபுரியில் செவ்வாய்கிழமை விஐபி தரிசனத்தை ரத்து செய்யுங்கள்: பக்தர்கள் ஆதங்கம்

-

- Advertisement -

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் விஐபி தரிசன வழியில் சென்றதால் விரக்தியில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பக்தர்கள் வாக்குவாதத்தால் சலசலப்பு.சிறுவாபுரியில் செவ்வாய்கிழமை விஐபி தரிசனத்தை ரத்து செய்யுங்கள்: பக்தர்கள் ஆதங்கம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார். வானதி சீனிவாசன் மற்றும் அவருடன் வந்த பாஜக நிர்வாகிகள் விஐபி தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.சிறுவாபுரியில் செவ்வாய்கிழமை விஐபி தரிசனத்தை ரத்து செய்யுங்கள்: பக்தர்கள் ஆதங்கம்

அப்போது கட்டண தரிசன வழியில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். கட்சி பிரமுகர்களை மட்டும் விஐபி வழியில் அனுமதிப்பதாகவும், பக்தர்கள் அனைவரும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டுமா என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். செவ்வாய்கிழமைகளில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் சிறுவாபுரியில் விஐபிக்கள் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஐபி தரிசன வழியில் அனுமதிப்பதை கண்டித்து பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

து.வேந்தர் மீது ஊழல்… பதிவாளர் நேர்காணல் நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ