Homeசெய்திகள்தமிழ்நாடுகுமரியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளர்... பதறிய அதிகாரிகள்... குமரியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளர்… பதறிய அதிகாரிகள்…
- Advertisement -
கன்னியாகுமரியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் கோணம் அரசு கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடும் சோதனைக்கு பிறகு முகவர்கள், வாக்காளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஏராளமான போலீசாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பகுஜன் திராவிடர் கழகம் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ராஜன்சிங், கத்தியுடன் வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். கத்தியுடன் வந்த வேட்பாளரைக் கண்ட அதிகாரிகள் பதறினர்.