Homeசெய்திகள்தமிழ்நாடு12 நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு ... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

12 நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு … வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

-

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 நாகை மீனவர்களையும், அவர்களது படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

"எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது ஆறுதல்"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைதான மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

fishermen arrested

அக்கடிதத்தில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய கைது நடவடிக்கைகள், இந்தியா-இலங்கை இடையிலேயான ஆக்கபூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

"கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி"- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26ம் தேதி அன்று படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024ஆம் ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், நேற்றைய  நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச்சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ