பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவரை தேடும் பணியில் இமாச்சலப்பிரதேசம் மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கஷாங் நாளா பகுதியில் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணித்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இறங்கி தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக, தமிழக காவல்துறையினருக்கு இமாச்சலப்பிரதேசத்தின் காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.
சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளியை குணமாக்கும் நுணா இலை மூலிகை!
இதனிடையே, சைதை துரைசாமியின் குடும்பத்தினர் விமானம் மூலம் இமாச்சலப்பிரதேசத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.