கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பால பகுதியில் மூன்று கார்கள், மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஏழு பேர் காயமடைந்தனர்.
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்
கூத்துக்குடி மேம்பாலம் பகுதியில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த கார் மீது அரசுப் பேருந்து ஒன்று மோதியது. அதனை தொடர்ந்து, ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அடுத்தடுத்து வந்த மூன்று கார்கள் மற்றும் மூன்று பேருந்துகள் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
‘தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!
விபத்தில் காயமடைந்த ஏழு பேரை மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த எடைக்கல் காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.