Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே ஏமாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவு

ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே ஏமாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவு

-

- Advertisement -

ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே மாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவு

கடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்பட பலரையும் ஏமாற்றிய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் பாபு என்பவர் மீது போலீசார் இன்று காலை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையே தொடங்கியுள்ளனர்.

உதயநிதிக்கு ஒரு கோப்பை.. முதல்வருக்கு ஒரு கோப்பை.. எப்படி ஏமாத்திருக்காரு..  வினோத் பாபுவின் லீலைகள் | how disabled cricket player cheats chief Minister  Stalin and ...

இராமநாதபுரம் மாவட்டம் கீழ செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் கடையில் வாங்கிய கப்புகளை வைத்துக்கொண்டு தான் வெளிநாடுகளில் சென்று போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றதாகவும், அதில் பாகிஸ்தானை வீழ்த்தி கப்பு வாங்கி வந்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வரையும் சந்தித்து கடையில் வாங்கிய கப்புடன் சென்று வாழ்த்து பெற்றார்.

ramanathapuram disabled person cheated cm stalin, முதலமைச்சர் ஸ்டாலின்  மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பனை ஏமாற்றிய ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி;  உளவுத்துறை ...

இதை அறிந்த உண்மையான வீல் சேர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் அவரால் ஏமாற்றப்பட்ட பலரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்திருந்தனர். இந்த புகார் மனுவை தொடர்ந்து அதிகாலை வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் (406,420) மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

 

MUST READ