Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி ஏற்படுத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி ஏற்படுத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு

-

இரண்டாம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி ஏற்படுத்த உயர்நீதிமன்றத்தில் வழக்குமெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு  வழக்கறிஞர் யோகேஷ்வரன், மெட்ரோ நிலையங்களில் சாய்தள வசதிகள் அமைக்கப்பட்டதாக கடந்த 2017ல் அறிக்கையில் தெரிவித்தது.

மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி ஏற்படுத்த உயர்நீதிமன்றத்தில் வழக்குஆனால், 2020ல் வெளியிடப்பட்ட கூடுதல் அறிக்கையில் 40 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சக்கர நாற்காலிகள் இருந்தும் மாற்றுத்திறனாளிகளால் ரயில் நிலையத்தை பயன்படுத்த முடிவதில்லை என குற்றம் சாட்டினார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும்,   ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும், எனவே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

MUST READ