இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு
நாகை மீனவர்கள் நேற்று கடலில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் நேற்று சபாபதி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கோடியாகரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் 7 பேர் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து படகில் ஏறி மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படகில் இருந்த 4 செல்போன்கள், ஜி.பி.எஸ் கருவி, 500 கிலோ வலைகள் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை பறித்துக் கொண்டு தாக்கி விரட்டி அடித்தனர்.
மீனவர்கள் உடனடியாக அவசரம் அவசரமாக கரைக்கு வந்த பிரதீப், பிரகாஷ், பிரவீன், திருமுருகன் ஆகிய 4 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழிபறி மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.