Homeசெய்திகள்தமிழ்நாடுதாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு - 24 ம் தேதிக்கு...

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு – 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

-

- Advertisement -

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டும், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பிதாகக் கூறி வழக்கை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு - 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு சுமார் ஒன்பதாயிரம் கோடி ஆறுகளை பாதுகாக்க ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான நிதி தயாராக இருப்பதாகவும், திட்டம் தயாராகியதும் நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நெல்லை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராபர்ட் பூரூஸ் வாதம்.

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்ப நீதிபதிகள் மாநில அரசுக்கு அறிவுறுத்தல். தூத்துக்குடி சேர்ந்த காமராசு, மதுரை அமர்வில், ” நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

நெல்லை எம்.பி.ராபர்ட் புரூஸ் நேரில் ஆஜராகி, “பாராளுமன்றத்திலும் ஆறுகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்பதாயிரம் கோடி ஆறுகளை பாதுகாக்க ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான நிதி தயாராக இருப்பதாகவும், திட்டம் தயாராகியதும் நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

மத்திய அரசுத்தரப்பில், “நிதியையும், உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. சரியான திட்ட அறிக்கையை வழங்கினால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டது. எம்.பி.ராபட் புரூஸ், “ஆறுகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட வேண்டும். தற்போது சிறிய மழை பெய்தால் கூட வெள்ளம் ஏற்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “விரைவாக திட்ட அறிக்கையைத் தயார் செய்து வழங்கலாமே? என கேள்வி எழுப்பினர்.

அரசுத்தரப்பில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கவில்லை” என தகவல் அளிக்கப்பட்டது. ” சொரிமுத்து ஐய்யனார் கோவில் திருவிழாவின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் சூழலில் போதுமான கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் திறந்தவெளியை, தாமிரபரணி ஆற்றுப்பகுதியை பயன்படுத்துகின்றனர்” என்றனர்.
அதற்கு நீதிபதிகள், “அங்கு பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிக்கலாமே? அங்கு வருபவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறலாமே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டும், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பிதாகக் கூறி வழக்கை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை அம்பத்தூரில் மக்கள் குறைகளை கண்டறியும் நிகழ்வு – அமைச்சர் சேகர்பாபு

 

MUST READ