காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (பிப்.22) காலை 10.00 மணிக்கு கூடியது. அப்போது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து, தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. மேகதாது அணை விவகாரத்தை கடந்த ஆட்சியில் கடுமையாக எதிர்த்தோம். சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது; சபாநாயகர் பேச விடுவதே இல்லை. அமைச்சரே பதில் அளிக்க தயாராக இருந்தாலும் பேரவைத் தலைவர் பேச அனுமதி மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது திட்டத்திற்கு இசைவுத் தர மாட்டார்கள். தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் கர்நாடகா ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது” என்றார். இதனிடையே அமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.