மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை தமிழக எம்.பி.க்கள் குழு நாளை (செப்.19) காலை 09.30 மணிக்கு சந்திக்கவுள்ளது. தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்திவார்கள்.
பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..
தமிழக எம்.பி.க்கள் குழுவில் டி.ஆர்.பாலு, தம்பிதுரை, ஜோதிமணி, வைகோ, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், சுப்பராயன், நடராசன் திருமாவளவன், சந்திரசேகரன், சின்னராஜ், நவாஸ் கனி ஆகிய 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி விவகாரத்தில் கர்நாடகா இன்று, நேற்றல்ல எப்போதுமே முரண்டு தான் பிடிக்கும். தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர கர்நாடகா எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை. மத்திய அரசு, கர்நாடகா அரசை நாங்கள் நம்பவில்லை; உச்சநீதிமன்றத்தை மட்டும் தான் நம்புகிறோம்; காவிரி விவகாரத்தில் இதுவரை அனைத்தையுமே நீதிமன்றத்தின் மூலமே பெற்றிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.