Homeசெய்திகள்தமிழ்நாடு"யாசகம் கேட்கவில்லை; நீரை கேட்கிறோம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

“யாசகம் கேட்கவில்லை; நீரை கேட்கிறோம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

-

 

"யாசகம் கேட்கவில்லை; நீரை கேட்கிறோம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
Video Crop Image

தமிழக சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் மீது பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி விவகாரத்தில் பேசிப் பார்த்து பலனில்லை என்பதால், நீதிமன்றத்திற்கு சென்றோம். கூட்டணி வேறு; மாநில உரிமை வேறு. இந்தியா கூட்டணி பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற உருவாக்கப்பட்டது; அது நோக்கம்; கொள்கையல்ல.

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்!

கர்நாடகாவிடம் இருந்து யாகசம் கேட்கவில்லை; நீரையே கேட்கிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது நமது உரிமையை அடகு வைப்பதாகிவிடும். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்துவது தற்கொலைக்கு சமமானது. கர்நாடகாவிடம் ஒரு கையளவு தண்ணீர் இருந்தாலும், அதில் தமிழகத்தின் பங்கு உண்டு. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பதால் தான் நாம் கேட்கிறோம்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத போக்கு நிலவுகிறது. கேரளாவை விட ‘விடாக்கண்டன் கொடாக்கண்டனாக’ இருப்பது கர்நாடகா. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோதே, கர்நாடகா அசையவில்லை. நம் ஒற்றுமையால் மட்டுமே காவிரி விவகாரத்தில் சாதிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸோடு ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள்?”- பேரவையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இதனிடையே, காவிரி நீரைப் பெறுவதற்காக, முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது.

MUST READ