
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவைச் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் இரண்டு போக சாகுபடியை மேற்கொள்கின்றனர். ஒன்று குறுவை, மற்றொன்று தாளடி. தற்போது மேட்டூர் அணை, சரியாக ஜூன் மாதம் 12- ஆம் தேதி திறக்கப்பட்டதால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் குறுவைச் சாகுபடிகளுக்கான பணியை மேற்கொண்டுள்ளனர்.
குறுவைச் சாகுபடி மேற்கொள்ள குறைந்தபட்சம், மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீருக்கு மேலாக திறந்தால் தான் கடைமடை வரை தண்ணீர் செல்லும். மேட்டூர் அணையில் இருந்து 24 மணி நேரமும் 1.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்தால் தான், எந்தவித தண்ணீர் தட்டுப்பாடும் இல்லாமல், விவசாயிகள் குறுவைச் சாகுபடி செய்து முடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால் தற்போது நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி. அளவு தண்ணீர் தான் திறக்கப்படுகிறது. இன்னும் 52 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் சூழ்நிலையில், நாளொன்றுக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டால், இரண்டு மாதத்திற்குள்ளாக தான் தண்ணீர் வரும்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தமிழக அரசு இந்த விசயத்தில் மவுனமாக உள்ளதாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் விமர்சித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
குறுவைச் சாகுபடி செய்ய கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே குறுவைச் சாகுபடியை செய்ய முடியும் என்ற நிலையில், விவசாயிகள் உள்ளனர். தமிழக அரசு, கர்நாடகாவில் இருந்து தண்ணீரைப் பெற என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு ஒரு மாதம் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், குறுவைச் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை எப்படி பெற்று தரப்போகிறது தமிழக அரசு? என கேள்வி எழுந்துள்ளது.
போர்க்கால அடிப்படையில் கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தரத் துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அ.தி.மு.க., அ.ம.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. நீரையும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. நீரையும் கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், ஜூன் மாத இறுதி வரை 2.7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இதுவரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.