Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அமலாக்கத்துறை - திமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை

மத்திய அமலாக்கத்துறை – திமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை

-

- Advertisement -

பூஞ்சோலை சீனிவாசன் அவரது வீட்டில் மத்திய அமலாக்க துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் தற்போது நடைபெற்று வருகின்ற சோதனைக்கான முழு காரணம் இதுவரை வெளியாகவில்லை இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க முற்பட்ட போது அவர்கள் யாரும் பதில் அளிக்க முன்வரவில்லை..மத்திய அமலாக்கத்துறை - திமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை

காட்பாடி திமுக பிரமுகர் மற்றும் ஊரக விளையாட்டு மேம்பாட்டு துறையில் வேலூர் மாவட்ட கபடி அமைப்பாளராக இருப்பவர்  பூஞ்சோலை சீனிவாசன்.. இன்று காலை காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் கீழ் மோட்டூர் பகுதியில் அவரது வீட்டில் மத்திய அமலாக்க துறையினர்  திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்…

சுமார் ஆறு பேருக்கு மேற்பட்ட குழுவினர் அதே பகுதியில் பூஞ்சாலை சீனிவாசனுக்கு சொந்தமான வேறு ஒரு வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய சிறப்பு அதிரடி படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..

தற்போது இரண்டு வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலின் போது பண பட்டுவாடா விஷயத்தில் இவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 11 கோடி சிக்கியதாக தகவல்கள் வெளியாகி அது சம்பந்தமான  வழக்கும் வேலூர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது நடைபெற்று வருகின்ற சோதனைக்கான முழு காரணம் இதுவரை வெளியாகவில்லை இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க முற்பட்ட போது அவர்கள் யாரும் பதில் அளிக்க முன்வரவில்லை..

தேர்தலின் போது நடைபெற்ற சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கிய விவகாரமா அல்லது மணல் குவாரிக்காக 400 கோடி ரூபாய் பெறப்பட்டதாக கூறப்படும் அந்த விஷயத்திற்காகவா என்று இதுவரை தெளிவாக எதுவும் தெரியவில்லை அதிகாரிகள் தெரிவித்தால் மட்டுமே தெளிவான காரணங்கள் தெரியும்.

விஜய் புகைப்படங்களை மார்ஃபிங் செய்த நிருவனம் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

MUST READ