நீட் தேர்வால் பயனில்லை என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது- மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது தான் இதன் பொருளாகும். நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் பூஜ்ஜியமாக குறைத்து அறிவிக்கப்பட்டதன் மூலம், நீட்-ல் உள்ள Eligibility என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதாவது பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பின்மூலம், நீட் தேர்வு அர்த்தமற்றது என அவர்களே ஒப்புக்கொண்டனர். இது பயிற்சி மையம் மற்றும் கட்டணத்திற்கான சம்பிரதாயமாக மாறிவிட்டது. உண்மையான தகுதிக்கான ளவுகோல் உல்லை. விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியும், மனம் தளராத ஒன்றிய அரசு தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீட் என்ற ஆயுதத்தால் பல உயிர்களை கொன்ற பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்” என்றார்.