Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

-

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Rain
செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ