Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

-

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், நாளை மறுதினம் டானா புயலாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சேலத்தில் கால்வாய்க்குள் விழுந்த இளைஞரால் பரபரப்பு

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ