Homeசெய்திகள்தமிழ்நாடுகாலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

-

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இதன் காரணமாக சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது.

குறிப்பாக சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை விரைந்து அகற்றி சீர்செய்தனர். இந்த நிலையில் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே,  தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ