Homeசெய்திகள்தமிழ்நாடுஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

-

- Advertisement -

திமுகவினர் என சொல்லி அதிமுகவினர் தீய செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

RS Bharathi

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களின் மீதும், மாநில உரிமைகளில் அக்கறையின்றி எப்போதும் மத்திய அரசை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். அதிமுகவினர் செய்யும் குற்றச் செயல்களை திசை திருப்பும் விதமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எந்த ஒரு குற்றச்சம்பவம் நடைபெற்றாலும் அது எப்படி திமுக ஆட்சியோடு முடிச்சு போட்டு, அவதூறு பரப்புவது என்ற செயலை தான் தொடர்ந்து பழனிசாமி செய்து வருகிறார். முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக நடைபெற்று வரும் ஆட்சியை எவ்வாறு சீர்குலைக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.

ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை சிலர் வழிமறித்த விவகாரத்திலும் திமுக மீது அவதூறு பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார் பழனிசாமி. ஆனால் உண்மை என்ன? தற்போது கைதாகி இருப்பவன் அதிமுகவை சேர்ந்தவன். எடப்பாடி பழனிசாமி இதற்கு என்ன கூறப் போகிறார். இதேபோல் அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக மீது வீணாக அவதூறு பரப்பினார். ஆனால் இறுதியில் கைதானது அதிமுக வட்ட செயலாளர் சுதாகர். இப்படி எத்தனையோ குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எல்லாம் அதிமுகவினரே தவிர. ஆனால் அதை எல்லாம் மறைத்து மக்களை திசை திருப்பும் நோக்கில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு பரப்பி வருகிறார் பழனிச்சாமி.

ஈசிஆர் வழக்கில் முக்கிய ஏ1 குற்றவாளியான சந்துரு எனும் நபரின் கார் தான், பறிமுதல் செய்யப்பட்டுள்ள சபாரி கார் என்று தகவல் வருகிறது. தாம்பரம் இரும்பலியூர் அதிமுக பிரமுகருக்கு, இவனுக்கும் என்ன தொடர்பு என்பதை போலீசார் வெளியிட வேண்டும். இப்படி குற்றவாளி அதிமுககாரன் என்றால் எடப்பாடி வாய் திறக்காமல் அமைதியாகி விடுவார். திமுக தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதை தாங்க முடியாமல் தொடர்ந்து பொய் வழக்கையும், அவப்பெயர் ஏற்படுத்தவும் செய்து வருகிறார்கள். திமுகவை பொறுத்தவரை புலன் விசாரணையில் தலையிட விரும்பவில்லை. இந்த ஆட்சியைப் பொருத்தவரை யார் குற்றம் செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! -  இபிஎஸ் 

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஆதாரம் உள்ளது என்று அண்ணாமலை கூறிக் கொண்டு இருக்கிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் அவரால் காட்ட முடியாமல் தவித்து வருகிறார். அவர் ஒரு உண்மையாக காவல் துறையில் இருந்திருந்தால் ஆதாரத்தை காவல் துறையிடம் அளித்திருக்க வேண்டும். ஆகவே அண்ணாமலையை முதலில் காவல்துறை கைதுசெய்ய வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ