Homeசெய்திகள்தமிழ்நாடுஃபெஞ்சால் புயலினால் பாதித்த மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஃபெஞ்சால் புயலினால் பாதித்த மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

-

- Advertisement -

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி, நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ளது.ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான அரையாண்டுத் தேர்வில் மாற்றம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புதமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என கல்வி நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு டிசம்பர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரையும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற்றது.

இதற்கிடையே, ஃபெஞ்சால் புயலின் தாக்கத்தால் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் இந்த மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை 02.01.2025 முதல் 10.01.2025ம் தேதிக்குள் நடத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி, நாளை(டிச.24) முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படவுள்ளது.

இளம் சிறார்கள் கல்வியில் கை வைக்கும் மத்திய அரசு; பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

MUST READ