Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்!

தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்!

-

1முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வை ஏப்22ம் தேதியும், ஏப்.12ம் ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வை ஏப்23 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கியது. தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி முதல் வருகிற ஏப்ரல் 08ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 4.57 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களும், 4.52 லட்சத்திற்கு அதிகமான மாணவிகளும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் எழுதுகின்றனர்.

இந்த நிலையில், 1முதல் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்.10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்.22ம் தேதிக்கும், ஏப்.12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்.23ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

MUST READ