Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

-

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!
File Photo

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு நீதிபதிகள் இன்று (மே 23) பதவியேற்கின்றனர்.

பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

அதன்படி, உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சக்திவேல், சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராஜசேகர் ஆகிய நான்கு பேரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இவர்கள் நான்கு பேரும் இன்று (மே 23) பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

MUST READ