Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னையில் 80% இடங்களில் மின்விநியோகம்"- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேட்டி!

“சென்னையில் 80% இடங்களில் மின்விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேட்டி!

-

 

"சென்னையில் 80% இடங்களில் மின்விநியோகம்"- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேட்டி!
Video Crop Image

‘மிக்ஜாம்’ புயல் மற்றும் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, “சென்னையில் இன்னும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன; சென்னையில் மழையில்லாததால் ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. சென்னையில் 80% பகுதிகளில் மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்”- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

தேங்கிய மழைநீர் குறையத் தொடங்கியதும், மீதமுள்ள பகுதிகளில் மின் விநியோகம் கொடுக்கப்படும். தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற 1,000 பம்ப்செட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் பம்ப்செட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மழை பாதித்த பகுதிகளில் ஆவின் நிறுவன பால் விநியோகம் சீராக கொடுக்கப்படுகிறது.

திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மாநகராட்சி சார்பிலும் சுமார் 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளன. சென்னையில் விரைவில் இயல்பு நிலை திரும்பத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

MUST READ