தீபாவளி பண்டிகையையொட்டி, மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்கு சென்றதால் மக்கள் சிரமமடைந்துள்ளனர்
மான நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க கேரள பெண்ணுக்கு உத்தரவு!
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரம் 230 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருங்குடியில் 169 ஆக உள்ளது. அரும்பாக்கத்தில் காற்று மாசின் தரம் 134, வேலூர்-123, ராயபுரம்-121, கொடுங்கையூர்- 112, மணலியில்- 109 ஆக உள்ளது.
“தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கற்று மாசுபாடு அதிகரிப்பின் காரணமாக, ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.